பேங்க் பேலண்ச டெய்லி செக் பண்றேன்: போரபோக்கில் மோடியை சீண்டிய மாறன்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (14:54 IST)
15 லட்ச ரூபாய் வங்கி கணக்கில் வந்து விழும் என தினமும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பதாக தயாநிதி மாறன் பேசியுள்ளார். 
 
திமுக எம்.பி. தயாநிதி மாறன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஏழையின் சிரிப்பில் இறைவனை காப்போம் என்ற முழக்கத்துடன், குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெகஜீவன் ராம், சென்னைக்கு வந்து இவற்றை பார்த்துவிட்டுத்தான், டில்லியில் இந்திரா ஆவாஜ் யோஜனா என்ற திட்டத்தை வகுத்தார். 
 
பாஜகவோ அதை பிரதமர் ஆவாஜ் யோஜனா என, மாற்றிச் சொல்கிறது. அனைத்துக்குமே, தமிழகம்தான் முன்மாதிரி.டில்லியில், குடியிருப்புகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையை, மத்திய அரசு, டில்லி சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் எடுக்கிறது. அதையும், முழு மனதோடு செய்யாமல், அரைகுறையாக செய்கிறது.
 
தேர்தலையொட்டி, பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போட்டிருக்க வேண்டும். நான் தினந்தோறும், என் வங்கி கணக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எந்தப் பணமும், வந்து சேரவில்லை என கலாய்க்கும் தோணியில் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்