சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் நோக்கம் தெரியாமல் எதிர்க்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமாக சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ராஜா, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் நோக்கம் தெரியாமல் இந்த திட்டத்தை எதிர்க்க கூடாது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக கிராமங்கள் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்.