பல நாள் ஒத்திகை! பஸ் டயரில் தலையை கொடுத்த இளைஞர்! – கடலூரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (16:27 IST)
கடலூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் இளைஞர் பேருந்து டயரில் தலையை வைத்து நசுங்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் உண்ணாமலைசெட்டி சாவடி அருகே உள்ள பனக்காட்டு காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு பவானி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வாகன பராமரிப்பு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குணசேகரன் சமீபத்தில் தனது மனைவி, குழந்தையுடன் சில்வர் பீச் சென்றுள்ளார்.

அங்கு பவானி குளித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த குணசேகரன் அப்போதிருந்து மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரது குழந்தையை தாத்தா-பாட்டி அழைத்து சென்று பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குணசேகரன் பேருந்து நிறுத்தத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பின் டயருக்கு குறுக்கே தலையை வைத்துள்ளார். இதனால் தலை சிதறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஏற்கனவே சிலமுறை அவர் டயருக்கு கீழ் தலை வைத்து ஒத்திகை பார்க்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்