கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்

வெள்ளி, 31 ஜூலை 2020 (20:33 IST)
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே போல் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகி வரும் எண்ணிக்கையும் தினமும் சுமார் 100 நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கடலூரில் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மற்றும் ஒரு சில வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
மீன் வளத் துறைத்துறையின் இந்த அறிவுறுத்தலை அடுத்து நாளை கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்