ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தமிழில் வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர் சேவாக்!

சனி, 21 ஜனவரி 2017 (08:40 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். இளைஞர்களின் அந்த அறவழிப்போராட்டம் ராணுவ கட்டுப்பாட்டுடன் மிகுந்த மரியாதைக்குறிய வகையில் தொடர்ந்து நடந்து வருகிறது.


 
 
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த அறப்போராட்டத்தை காண்டு நாடே வியந்து நிற்கிறது. வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு பிரபலங்கள் மாணவர்களின் போராட்ட முறைக்கு தலைவணங்குகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தமிழக மக்களின் போராட்டத்துக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் கூறியுள்ள சேவாக், அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன் என பதிவிட்டுள்ளார்.

 
சேவாக் இந்த பதிவினை தமிழில் செய்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து தனது ஆதரவை டுவிட்டர் மூலமாக தெரிவித்து வருகிறார்.
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்களை சாடிய ஜடேஜா, திமுக போன்ற கட்சிகள் செய்த ரயில் மறியல் போராட்டம் மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்புவதாக உள்ளதாகவும் விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்