சர்ச்சையாக பேசிய வழக்கு; ஆஜராகாத எச்.ராஜா! – பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:34 IST)
அறநிலையத்துறை அதிகாரிகளையும், பெண்களையும் இழிவாக பேசிய வழக்கில் ஆஜராகாத எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய எச்.ராஜா அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்கள் வீட்டு பெண்களையும் குறித்து இழிவாக பேசியதாக அவர் மீது விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிலையில், நேற்றைய விசாரணைக்கு எச்.ராஜா அஜராகவில்லை.

இதனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு 27ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்று எச்.ராஜா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்