சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது எப்படி??

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (14:12 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
 
நேற்று தமிழகத்தில் 3,965 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் பாதிப்பு அடைந்த 3,965 பேர்களில் 1,185 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட இப்போது குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை மக்கள் ஒத்துழைப்பும் கொரோனா பாதிப்பு குறைய முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்