இந்நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று பிற்பகல் மெரினா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு அதிமுக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, மேலும், அதிமுக கட்சியைப் பிரிக்க சதிகள் நடக்கும் எனவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.