வண்டலூரில் ரயில் மோதி 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு: நண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்

திங்கள், 31 அக்டோபர் 2022 (12:57 IST)
வண்டலூரில் ரயில் மோதி 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு: நண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்
 சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் சுற்றுலா வந்த 19 வயது கல்லூரி மாணவி சோனியா ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி சோனியா என்பவர் தனது நண்பர்களுடன் உயிரியல் பூங்காவுக்கு வந்தார். அவர் உயிரியல் பூங்காவை நண்பர்களுடன் சந்தோசமாக சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்தார். 
 
அப்போது தண்டவாளத்தின் குறுக்கே கடந்து நடைமேடையில் ஏறிய போது அவர் உயரம் குறைவாக இருந்ததால் ஏற முடியாமல் கீழே விழுந்தார். அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த அவர் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கு பின்னர் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்க வேண்டாம் என ரயில்வே போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் கற்றுக்கொண்டேன்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்