தினமும் பொய் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:06 IST)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் செய்த தவறுகளை மறைக்க தினமும் பொய் சொல்லி வருகிறார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் 
 
தமிழகத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தற்போது விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் இன்று இன்றைய தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியபோது மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிச்சாமி தான் செய்த ஊழல்களை மறைக்க தினமும் பொய் சொல்லி வருகிறார் என்று கூறியுள்ளார் 
 
மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை  மறைக்கவும் தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழலை மறைக்கவும் தினமும் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லி வருகிறார் என்றும், அவரது பொய் இங்கே எடுபடாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்