முதல்வரிடம் ரூ.1000 வரவில்லை என்று சொன்ன பெண்.. அமைச்சரை கடிந்து கொண்ட முதல்வர்?

Siva

வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:36 IST)
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு பகுதியில் வாக்கு சேகரித்தபோது அங்கு இருந்த பெண் வியாபாரி ஒருவர் எனக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று முறையிட அப்போது ஏதாவது காரணம் இருக்கும் என்று முதல்வர் பதிலளித்தார் 
 
அதற்கு அந்த பெண் என் கணவர் அரசு வேலையில் இருக்கிறார் என்று சொன்னபோது அப்படி இருக்கும்போது கேட்பது நியாயம் இல்லையே என்று முதல்வர் பதில் சொன்னார். அதற்கு அந்த பெண் பதிலடியாக என் கணவர் சாப்பிட்டால் என் வயிறு நிரம்பிவிடுமா? என்று எதிர் கேள்வி கேட்க இது குறித்த வீடியோவை எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனால் கடுப்பான முதல்வர் தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட ஆட்களோடு ஏன் என்னோடு பேச வைக்கிறீர்கள் என்று அந்த தொகுதியின் பொறுப்பு அமைச்சரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி தனது பிரச்சார பயணத்தில் பல சொதப்பல்கள் இருந்ததாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சரை கூப்பிட்டு அவர் கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட அமைச்சர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்