இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்த கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்ததுதான் நீட் தேர்வை ஒழிப்பீர்கள் என்றால் தற்போது புதுச்சேரியில் உங்கள் கூட்டணி அரசு தானே நடக்கிறது? ஏன் நீட் தேர்வை புதுச்சேரியில் ஒழிக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்விக்கு முக ஸ்டாலின் என்ன பதிலளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.