நாளை வெளியாகிறது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! – ரிசல்ட் பார்ப்பது எப்படி?

Prasanth Karthick
திங்கள், 13 மே 2024 (18:46 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்த 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாளை 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை (14.05.2024) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்களுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேர்ச்சி விவரங்களை காணலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்