இந்நிலையில் பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம், ஏன் நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு தடை விதிக்கவில்லை என டி.ஆர் கேள்வி கேட்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசிய அன்புமணி புகையிலைக்கு தடை விதிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை, ஆனால் குட்காவிற்கு சுகாதாரத் துறையால் தடை விதிக்க முடியும். அதனால்தான் நான் அமைச்சராக இருந்தபோது குட்காவை தடை செய்தேன். புகையிலையை தடை செய்ய வேண்டுமென்றால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், வர்த்தக துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
அப்படி இருக்கும் வேளையில், இது குறித்து நான் பல முறை விளக்கமளித்து விட்டேன். ஆனால் விடாமல் இதனை டி.ஆர் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு காரணம் டி.ஆருக்கு மட்டுமல்ல சினிமா காரங்களே கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்களின் சிந்தனை வேறு மாதிரியாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு அவ்வளவாக புத்தி சரியாக இருக்காது என அதிரடியாக பேசினார் அன்புமணி.