தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இந்த கொளுத்தும் வெயில் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் வறண்டு வந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் சிவகங்கை மதுரை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்ட நிலையில் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து உள்ளது ஆற்றில் யாரும் இறங்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காக தான் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடி கொண்டிருக்கின்றனர், ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் முன் மானாமதுரை நகராட்சிநிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்