மீண்டும் திறக்கப்பட்டது ரிச்சி ஸ்ட்ரீட்: தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுமா?

செவ்வாய், 26 மே 2020 (11:11 IST)
மீண்டும் திறக்கப்பட்டது ரிச்சி ஸ்ட்ரீட்
இந்தியாவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் சந்தைகளில் ஒன்றான ரிச்சி ஸ்ட்ரீட் கடந்த சில நாட்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது 
 
இந்தியாவில் டெல்லியை அடுத்த இரண்டாவது பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தை என்றால் அது சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் தான். இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இந்த எலக்ட்ரானிக் சந்தையில் கிடைக்காத கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என்ற அளவுக்கு அனைத்து பொருள்களும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதால் தென்னிந்தியாவிலிருந்து பலரும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள் 
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த இரண்டு மாதங்களாக ரிச்சி ஸ்ட்ரீட் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் ஏற்பட்டதை அடுத்து ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்கள் தேவைப்படும் நபர்கள் தற்போது இந்த தெருவுக்கு வர தொடங்கினார்
 
மேலும் ரிச்சி ஸ்ட்ரீட் என்பது மிகவும் குறுகலான தெரு என்பதால் இந்த தெருவில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து அரசு மற்றும் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்