ஸ்க்ரீன்ஷாட் அனுப்புனா போதும்.. ஒரு நாளுக்கு 1400 ரூபாய்! – மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த மக்கள்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (11:15 IST)
ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக சென்னையில் பலரிடம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை கோட்டூரை சேர்ந்த லட்சுமி என்பவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த நிலையில் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது அவருக்கு வேலை தருவதாக தொடர்பு கொண்ட நிறுவனம் ஒன்று யூட்யூபில் வீடியோக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாட்ஸப் எண்ணுக்கு அனுப்பவதே வேலை என்றும் இதற்காக ஒரு நாளைக்கு 1400 ரூபாய் சம்பளம் தருவதாகவும் ஆனால் அதற்கு முன்பு 30,000 பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதை நம்பி அவர் பணம் செலுத்திய நிலையில் தினமும் அவருக்கு 1400 வங்கி கணக்கில் வந்துள்ளது. இதுகுறித்து அவர் அவரது நண்பர்களுக்கு தெரிவிக்க அவர்களுக்கும் ஆளுக்கு 30,000 பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு பணம் வருவது நின்றுள்ளது. இதுகுறித்து கேட்க அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்துள்ள நிலையில் சைபர் க்ரைம் போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்