தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்திய 50 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதில் 2000 பேரை கைது செய்த போலீஸார் 50 பேரை மட்டும் விடுவிக்கவில்லை.
அந்த 50 பேர் மீது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுப்பது, பதட்டத்தை ஏற்படுத்துதல், மிரட்டல் விடுதல் ஆகிய பிருவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பலர் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் சென்னையில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.