அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன், 10 நவம்பர் 2022 (07:58 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதன் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்