சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! – மக்கள் பீதி!

Webdunia
சனி, 2 மே 2020 (13:31 IST)
சென்னையில் பல்லாவரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே தாம்பரத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பொது இடத்தில் கூடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் தொழிலாளர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்