வசிக்கும் பகுதியிலிருந்தே வாக்களிக்க புதிய தொழில்நுட்பம்..

Arun Prasath
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:56 IST)
வாக்காளர்கள் வாக்களிக்க தங்களது ஊர்களுக்கு செல்லாமல் வசிக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய சென்னை ஐஐடி தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தேர்தலின் போது வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வர். இதனால் அரசு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். எனினும் கூட்ட நெரிசலால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் வசிக்கும் பகுதியில் இருந்தே வாக்களிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய தேர்தல் ஆணையத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் இத்தொழில்நுட்பம் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்