சாப்பிட்ட எலும்பில் பாயா: பிரபல உணவகத்தின் 3 கிளைகளுக்கும் சீல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (12:02 IST)
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கழிவாக போட்ட எலும்பில் பாயா செய்ததாக சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் 3 கிளைகளுக்கும் உணவு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல உணவகமான பாண்டியாஸ் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர் 
இந்த ஆய்வின்போது தரமற்ற கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு போட்ட எலும்புத் துண்டுகளின் மூலம்  பாயா செய்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப் பட்டது 
 
இதனையடுத்து அந்நிறுவனத்தின் சென்னையில் உள்ள மூன்று கிளைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்