தமிழகம் முழுவதும் அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்டதன் பேரில் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. அரசின் இந்த முடிவுக்கு எதிராக குடிநீர் ஆலைகள் உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி தருவது குறித்து தமிழக அரசுக்கு பரிசீலனை செய்தது.
இதுகுறித்து பரிசீலனை செய்ய 90 நாட்கள் கால அவகாசம் கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் 90 நாட்கள் அவகாசம் வழங்கமுடியாது எனவும் இரண்டு வாரங்களுக்கும் விண்ணப்பிக்கும் குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி அளிக்க பரிசீலிக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.