மெரினாவில் போராட்டத்திற்கு தடை விதித்த ஐகோர்ட்

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (18:13 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம், மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள்  போராட்டம் நடத்த அனுமதி அளித்து இருந்தார்.
 
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இதன் விளைவாக தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது என உத்தரவிட்டனர்.மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்  சட்டம் ஒழுங்கை  நிலை நாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே  என உத்தரவிட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்