முருகன் தான் இந்த கொள்ளைக்கு தலைவராக இருந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முருகன் உள்பட 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தம் கொள்ளை போன 32 கிலோ நகைகளில் 20 கிலோ கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 12கிலோ நகைகள் ஒருசில கூட்டாளிகள் பங்கு எடுத்துக் கொண்டதாகவும் அவர்களையும் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது