புயல் கரையைக் கடந்த நிலையில் மீண்டும் தொடங்கிய சென்னை விமானப் போக்குவரத்து!

vinoth
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (07:51 IST)
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில்  நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது. முக்கியமாக மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகள்  தண்ணீரால் நிரம்பி காணப்பட்டன. முக்கியமாக விமானப் போக்குவரத்து சேவையும் முடங்கியது.

விமானங்கள் ஓடும் தளத்தில் மழைநீர் வெள்ளக் காடாக காட்சியளித்ததால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திலேயே காத்திருக்கும்படி ஆனது.

இந்நிலையில் புயல் நள்ளிரவில் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. நள்ளிரவு ஒரு மணி முதல் விமான சேவைகள் திரும்பத் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக கனமழை காரணமாக அதிகாலை நான்கு மணி வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்