கஜாவை தேசிய பேரிடராக அறிவியுங்கள்... உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:23 IST)
கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பனை, வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்துள்ளன்.
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். அதில் பேரிழப்பு ஏற்படுத்திய இந்த கஜா புயலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.
 
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்