தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தடை விதித்த மத்திய அரசு! – நிலுவை பாக்கிக்காக நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:51 IST)
மின்பகிர்மான நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மாநில அரசுகள் தனித்தனியாக மின்சார வாரியங்களை நிர்வகித்து வரும் நிலையில் மின்பகிர்மான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கி ரூ.5,100 கோடி செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னதாக மாநில அரசுகளுக்கு செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி நிலுவை தொகையை விரைந்து செலுத்துமாறு கூறியிருந்தார். இந்நிலையில் மின்பகிர்மான நிலுவை தொகை செலுத்தப்படாததால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க மற்றும் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்மான விவகாரங்களில் மத்திய அரசு தேவையின்றி தலையிடுவதாக மாநில அரசுகள் பல குற்றம் சாட்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்