செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவால் இளைஞர் பலி! காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (09:47 IST)
கோப்புப் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்த வட மாநில இளைஞர் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவு தாக்கி உயிரிழந்துள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜியாருள் மியா (20) என்பவர் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தான் தங்கியிருந்த அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் செல்போன் சார்ஜர் கேபிள் மேல் கைப்பட்டுள்ளது. அப்போது அந்த கேபிளில் மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது பாய்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்