நிர்மலா தேவியின் ரகசிய டைரி - சிக்கும் விவிஐபிக்கள்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:24 IST)
கல்லூரி பெண்களிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலாதேவியிடம் ஒரு டைரியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

 
இந்நிலையில், நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், அவரது காரிலும் அவர்கள் சோதனை நடத்தினார்.
 
அப்போது, ஒரு ரகசிய டைரியை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் இருந்தனவாம். எனவே, அதில் குறிப்பிட்டிருக்கும் நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நிர்மலா தேவியின் ரகசிய டைரி சிக்கியிருப்பதால், அதில் உள்ள விவிஐபிக்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்