500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:21 IST)
சென்னை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு. 

 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் திடீரென நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனை காலை 6 மணி முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 
 
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை முதல் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து ரோஸ்மில்க், தக்காளி சாதம், டீ காபி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து சென்னை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்