ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sinoj
வியாழன், 29 பிப்ரவரி 2024 (18:17 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி  வேதாந்தா  நிறுவனம் தாக்கல் செய்த மனுவை  இன்று  உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு  தள்ளுபடி செய்தது.
 
இம்மனு மீது  நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட விதிமீறல்கள் குறித்து  தமிழ்நாடு அரசு பல விவரங்களுடன் தெளிவான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தது.
 
எனவே இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம்,  ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் பல இருப்பதால், அரசு, உயர் நீதிமன்ற, உரிய முடிவு எடுத்துள்ளது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டு, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று உத்தரவிட்டு, அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்