இதனிடையே எஸ்ஆர்எம் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதன் வேந்தர் பச்சமுத்து மற்றும் மதன் ஆகியோருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி மாணவர்களின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மதன் மீதான மோசடி வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த குழுவில் சுதாகர், லலிதா லட்சுமி ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை சரியாகத்தான் செல்கிறது. எனவே விசாரணையை வேறு அமைப் புக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேலும், பச்சமுத்து தரப்பில் ரூ. 75 கோடி விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. எனவே பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.