அசால்ட் அரசால் தொடரும் பேருந்து விபத்துகள்; பயணிகள் அவதி

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (11:40 IST)
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதை அடுத்து தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 
போக்குவரத்து உழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், அரசு தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் தற்காலிக ஓட்டுநர்களால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆவடி பேருந்து நிலையத்தில் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை சுவற்றில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதேபோல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்து பள்ளத்தி இறங்கி விபத்துள்ளாகியது. இதில் பயணிகள் காயமடைந்தனர்.
 
தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகள் ஆங்காங்கே விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்