ராமரை பெரியார் செருப்பால் அடிக்கவில்லையா? கொளத்தூர் மணிக்கு பதிலடி வீடியோ

வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:58 IST)
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர்  உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது ராமர் படத்தை செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதாகவும், இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இன்று கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
இந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டரில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய ஒரு வீடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமரை செருப்பால் பெரியார் அடித்ததாக வீரமணியே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

#தத்தி_பாய்ஸ்
கேட்டுச்சா?
ராம்சாமி அன்று சொன்னது இன்று அனுகூலசத்ருவாகிப் போனதை என்னவென்று சொல்லுவது?@BJP4TamilNadu @rajinikanth pic.twitter.com/ogIMPceFkq

— PARANTHAMAN.SRIDARAN

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்