இது குறித்து கரு.நாகராஜன் தெரிவித்தது விரிவாக பின்வருமாறு, இன்று தமிழகத்தில் அடிக்கடி ஜனநாயகத்தை பற்றியும் மக்கள் பிரச்சினைகளை தவறான வழிகளில் பொருள்படுத்தும் வைகோ கடந்த 4 சட்டசபை தொகுதிகளிலும் 4 விதமான நிலைப்பாடுகளை எடுத்தவர்.
தனியாக, அதிமுகவுடன், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு தோற்று பின்னர் சட்டசபை தேர்தலையே புறக்கணித்தும் இருக்கிறார். அப்படி இருக்கையில் மக்கள் நல கூட்டணியில் இருந்த போது திமுகவையும் ஸ்டாலினையும் அவரை போல் விமர்சித்தவர்கள் யாரும் கிடையாது.
இதற்கு முன்னர், மு.க.ஸ்டாலினை அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென்பதே வைகோவின் குறிக்கோள். உறவு கொண்டாடியே திமுக தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என கரூரில் பாஜகவின் அரசக்குமார் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.