அதிமுகவில் இணைய என்னை கட்டாயப்படுத்தினர்: பாஜக ஐடி விங் நிர்வாகி புகார்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (09:15 IST)
அதிமுகவில் இணைய என்னை கட்டாயப்படுத்தினார்கள் என பாஜக ஐடி விங் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் மற்றும் ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று திடீரென பாஜக ஐடி விங் நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் தன்னை இணைய கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தனர் என பாஜக ஐடி விங் நிர்வாகி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ஆ கே சரவணன் தனது வீடியோவில் கூறிய போது அதிமுக நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தனர் என்றும் நான் இப்போதும் பாஜகவில் தான் இருக்கிறேன் என்றும் பாஜகவில் இருந்து விலகும் எண்ணமே தனது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து அதிமுகவினர் வலுக்கட்டாயமாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை பாஜகவில் இருந்து வெளியேற நிர்பந்தம் செய்து உள்ளார்கள் என்றும் அதிமுகவில் இணைய கட்டாயப்படுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்