மக்களவை தேர்தலில் 25 எம்.பி.க்கள் உறுதி: அண்ணாமலை பேச்சு

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:12 IST)
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பிக்கள் பாஜக பிடிக்கும் என கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மக்களவை தேர்தலில் எப்போதும் அதிமுக மற்றும் திமுக அணிகளுக்கிடையில் தான் போட்டி நடைபெறும். இந்த நிலையில் இந்த முறை பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த  நிலையில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 10 முதல் 15 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது பாஜகவுக்கு தமிழகத்தில் 25 எம்பிக்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்