இந்த நிலையில், மின் உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் இன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில், விருது நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, திரு மங்கல டோல்கோட் அருகே வந்தபோது, அவரையும், அவரது கட்சினரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து முறையாக முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கின்றது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாஜக சார்பாக எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறதுஎன்று பதிவிட்டுள்ளார்.