அதில், அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் ஒரு பிராடு, அவரை கடந்த 25 வருடமாக தெரியும், எனது வீட்டு வாசலில் வந்து கிடப்பார் என தரம் தாழ்ந்து பேசினார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அய்யாக்கண்ணு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எச்.ராஜா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவருக்கு போன் செய்து கேட்டதாக கூறினார். எப்ப சார் நான் உங்க வீட்ல வந்து இருந்தேன், நான் என்ன ஃபிராடு தனம் சார் செய்தேன் எனக் கேட்டேன் அதற்கு ராஜா சாரி அது தெரியாம நடந்து போச்சு நான் வேனா வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுகின்றேன் என தன்னிடம் கூறியதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.