அத்திவரதர் கையில் எழுதப்பட்டுள்ள ”மாசுச” எதை குறிப்பிடுகிறது?

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:45 IST)
காஞ்சிபுரம் அத்திவரதர் கையில் உள்ள தங்க கவசத்தில் ”மாசுச” என எழுதப்பட்டுள்ளதற்கான அர்த்தம் என்னவென தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே வந்து அருள் தரும் அத்திவரதர் நேற்று முதல் நின்ற கோலகத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சயன கோலத்தில் அவர் 31 நாள்களாக அருள்பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். அத்திவரதரின் கரத்திற்கு தங்க கவசம் போடப்பட்டுள்ளது. இந்த தங்க கவசத்தில் ”மாசுச” என்று எழுதப்பட்டுள்ளது. 
”மாசுச” என்பது வடமொழி சொல். இதற்கு கவலைப்படாதே என்று பொருள். பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுஜனிடம் சொன்ன கடைசி வார்த்தை ‘மாசுசஹா’. இதைத்தான் சுறுக்கமாக ”மாசுச” அத்திரவரதரின் தங்க கவசத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 
 
`மாசுசஹா' என்றால் எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன் என்று அர்த்தமாம். கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் இந்த தங்க கவசத்தை வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்