ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஒரு வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (16:54 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில விஷயங்களை பூடகமாக சொல்லி வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அவர் பதிவு செய்த இரண்டு டுவிட்டுக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் தற்போது AUTONOMOUS என்ற ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்து இதற்கு கேம்பிரிட்ஜ் டிக்ஸ்னரியில்  'எந்தவொரு முடிவையும் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் எடுக்கும் அதிகாரம்' என்று அர்த்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட் பலரை யோசிக்க வைத்துள்ளது.
 
தமிழகத்தை ஆட்சி செய்து வருபவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சொந்தமாக சிந்தித்து முடிவை எடுக்காமல், மத்திய அரசு கூறி வருவதற்கு தலையாட்டி வருவதை மறைமுகமாக ஏ.ஆர்.ரஹ்மான் சுட்டிக்காட்டி வருவதாக டுவிட்டர் பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர். 
 
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை எந்த ஒரு சர்ச்சைக்குரிய பதிவையும் தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்ததே இல்லை. எனவே இதுவும் அரசியல் குறித்து இருக்காது, அவர் சொல்ல வருவது வேறு என்றும் ஒருசிலர் கருத்து கூறி வருகின்றனர். 
 
உண்மையில் அவர் எதை மனதில் வைத்து இப்படி ஒரு டுவீட்டை போட்டார் என்று தெரியாவிட்டாலும் இந்த டுவீட் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்