தோல்வி அடைந்தாலும் பாஜகவுக்கு வாக்கு வங்கி குறையவில்லை: கர்நாடக தேர்தல் குறித்து அண்ணாமலை..!
திங்கள், 15 மே 2023 (07:53 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்தாலும் வாக்கு வங்கியை இழக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசிய போது கர்நாடகாவில் 2013 ஆம் ஆண்டு பாஜகவுக்கு வெறும் 19% வாக்குகள் தான் இருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு 36 சதவீத வாக்கு வங்கியை பெற்றது, 2023 ஆம் ஆண்டிலும் அதே 36 சதவீதத்தை பாஜக தக்க வைத்துள்ளது.
எனவே பாஜக தோல்வி அடைந்த ஆட்சியை இழந்தாலும் வாக்கு வங்கியை பொருத்தவரை இழக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் நான்கு சதவீத வாக்கு வங்கி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் கர்நாடகாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் கட்சி வெற்றி பெற்றதில்லை என்ற சரித்திரம் உள்ளது. அந்த வகையில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.