சென்னை போல் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: தென்மாவட்ட மழை குறித்து அண்ணாமலை..!

ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (17:04 IST)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார். 
 
மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
 
தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பாஜக சகோதரர்கள், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்