காயத்ரி ரகுராமை அடுத்து பாஜக துணைத் தலைவர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி

வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:47 IST)
சமீபத்தில் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டதன் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணாமலை அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர் ஆரூர் ரவி என்பவருக்கும் புதிய தலைவர் அருள் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது 
 
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார்
 
கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்