எதற்கெடுத்தாலும் வழக்கா? சாட்டை துரைமுருகன் கைதை கண்டித்து அண்ணாமலை கருத்து

Siva

வியாழன், 11 ஜூலை 2024 (15:02 IST)
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
சாட்டை துரைமுருகன் கைதுக்கு எனது கண்டனங்கள். சும்மா அவரை கைது செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழகத்தில் கூலிப்படைகள், ரவுடிகள் அட்டூழியத்துக்கு எதிராக காவல்துறை தங்களது வீரத்தை காண்பிக்க வேண்டும். 
 
எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்தக் கட்சியை சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனைக் கண்டிக்கிறேன். காவல்துறையினர் திமுகவின் ஏவல்துறையாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை. மக்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் செல்வப்பெருந்தகை குறித்து கூறிய அண்ணாமலை, ‘அவர் முன்னாள் ரெளடி என்று நான் சொன்னது உண்மை. அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். குண்டர் சட்டத்தில் தான் கைது செய்யப்படவில்லை என அவர் சொல்லவில்லையே. இதை கூறியதற்கு காங்கிரஸ் பிரமுகர்களே என்னை வாழ்த்துகின்றனர் என்று பதிலளித்தார்.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்