விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும், அன்புமணியின் எதிர்ப்பு குறித்து கருத்து கூறிய சிம்பு, இதுகுறித்து அன்புமணியுடன் விவாதிக்க தயார் என்றும் கூறியதும் தெரிந்ததே
இந்த நிலையில் சிம்புவின் சவால் குறித்து இன்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'சிம்புவின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் ஒரு கூட்டத்தை கூட்டினால் அதில் நான் விவாதிக்க தயார் என்று கூறினார்.