மலர்க் கண்காட்சியில் அம்மா உணவகம்

வெள்ளி, 24 ஜூன் 2016 (15:24 IST)
ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

 
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஜூன் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது.
 
இந்த மலர்க் கண்காட்சி நுழைவு வாயிலில், மாம்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பூ, பாக்குப்பூ மற்றும் முள்ளங்கி, கோக்கோ உள்ளிட்ட காய்கறி, பழங்களைக் கொண்டு அலங்கார நுழைவு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.
 
சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் 2 லட்சம் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு குதிரை, பசுமை வீடு, அம்மா உணவகம், மாட்டு வண்டி, கங்காரு ஆகிய உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட உள்ளன. 
 
தமிகத்தில் அம்மா உணவகம் மிகவும் பிரபலம் என்பதால், இந்த கண்காட்சியில் அம்மா உணவகம் போல் அலங்காரம் செய்து அமக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்