விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் விபத்து: டிரைவர் பலி

திங்கள், 4 ஜூலை 2016 (10:20 IST)
வாணியம்பாடி அருகே பைக் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிராக்டரில் மோதி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார்.


 

 
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது தாவீத், சதம் மற்றும் இஷாத் அகமது ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவிந்தபுரம் தேசிய நெடிஞ்சாலையில் 2 பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருதரப்பிரனரும் கயம் அடைந்தனர்.
 
காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிராக்டர் மீது மோதியது. அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார்.
 
பின்னர் வேறொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் விபத்தில் சிக்கிய அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகினறனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்