திமுகவின் பொதுக்கூழு கூட்டம் நாளை கூடுகிறது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் திமுகவில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
எனவே, தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர் என தெரிகிறது. இந்நிலையில், அழகிரி, ஸ்டாலினை எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
கருணாநிதி இருந்த வரை நான அமைதியாக இருந்துவிட்டேன். தற்போது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற போது கலைஞர் உயிருடன் இருந்தார். அதனால் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களை கட்சியில் சோ்க்காவிட்டால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.